Thursday, May 31, 2007

தீ நகர் (ஜாசி கிஃப்ட்)

நீயெ என் சாராயத்தெரு மற்றும் காப்பாத்த முடியல, பெயருக்கு ஏற்றார்போல் அபத்தமாக உள்ளன. ஆயினும், முதல் பாடலின் வாத்தியக்கலவை வித்தியாசமாக உள்ளதால் ஈர்க்கிறது. காப்பாத்த முடியலவின் தாளக்கலவை எண்பதுகளில் வெளியான இளையராஜாவின் பாடல்களை நினைவுபடுத்தினாலும், இப்பொழுது நாம் அந்த காலகட்டத்தை கடந்து பல வருடங்கள் ஆனது நினைவிருக்கலாம்! கடவுள் எதுக்கு பாடலில் சித்ராவின் குரல் இருந்தாலும் எனக்கு ஏற்படும் உணர்ச்சி தூக்கம் மட்டுமே! நமக்கு பரிச்சயமான நாட்டுப்புற இசையை தழுவியவையாக இருந்தாலும் ஒத்த புள்ள மற்றும் கலகக்காரா பாடல்களில் வலு மிகவும் குறைவுதான். அனுபவமே இல்லாத ஒரு கத்துக்குட்டி இசை அமைப்பாளரின் எல்லா சாயலும் ஆயிரம் ஆயிரம் பாடலில் உள்ளது. தீ நகர் இசையை கேட்கும்பொழுது, ஜாசி கிஃப்டின் இசை அமைப்பாளர் என்ற அடையாளம் அபூர்வமான, ஒரு-பட நிகழ்வாகவே தோன்றுகிறது.

No comments: